உங்க குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்கணுமா,இதைப் பின்பற்றுங்கள் !


உங்க குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்கணுமா,இதைப் பின்பற்றுங்கள் ! 

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த வழிமுறைகள் :

தற்போது c-section எனப்படும் சிசேரியன் அறுவைச் சிகிச்சையிலேயே 90 % குழந்தைகள் பிறக்கின்றன. அக்குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் பிறந்தது முதல் கடுமையான நெஞ்சுச் சளி, இருமல் முதலியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். தாய்மார்களும் உடனே பயந்து குழந்தைகள் நல மருத்துவரை அணுகி பல்வேறு syrup களை வாங்கிப் பயன் படுத்துவர். உடனடியாக சளி, இருமல் விலகியது போல இருந்தாலும், கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் வரும்.
syrup போன்ற கெமிக்கல்கள் சளியைக் குறைப்பதில்லை. மாறாக நோய் அறிகுறிகளை (symptoms) மட்டும் நீக்குகிறது.  நாம் நம் மருத்துவரின் மருந்து நன்றாக வேலை செய்து விட்டது என்றே நினைப்போம். உண்மையில், சளி கிருமிகள் நுரையீரலை அடைந்து அங்கேயே  தங்கி விடுகின்றன. எனவே அவர்கள் வீசிங் முற்றும் ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்படுவர்.
கைக்குழந்தைகள் எனில் நாம் சளிப் பொடி அல்லது உர மருந்து போன்றவற்றை சங்கில் உற்றிக் கொடுக்கலாம். (சளிப் பொடி / உர மருந்து செய்முறை அடுத்த பதிவுகளில் தரவிருக்கிறேன்.)
கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் எனில் மருந்து, கஷாயம் குடிக்க ஆடம் பிடிக்கும். அவர்களுக்காகவே பின் வரும் எளிய குறிப்புகளை பகிர்ந்துள்ளேன். 
கைக்குழந்தைகள் எனில் நாம் சளிப் பொடி அல்லது உர மருந்து போன்றவற்றை சங்கில் உற்றிக் கொடுக்கலாம். (சளிப் பொடி / உர மருந்து செய்முறை அடுத்த பதிவுகளில் தரவிருக்கிறேன்.)
கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் எனில் மருந்து, கஷாயம் குடிக்க அடம் பிடிக்கும். அவர்களுக்காகவே பின் வரும் எளிய குறிப்புகளை பகிர்ந்துள்ளேன்.
நம் வீடுகளில் எளிதாக வளரும் ஒரு தாவரம் "துளசி". துளசி இலைகளைப் பொடியாக அரிந்து தோசை மாவில் கலந்து mixy யில் இட்டு அரைக்கவும். அரைத்த மாவை தோசை வார்த்துக் கொடுக்கவும். இம்முறையில் ஒரு மாதத்தில் குழந்தைகள்  நோய் எதிர்ப்பு பெருகி, சளி இல்லாத ஆரோக்கியமான நிலையை அடைவதை நாம் கண்கூடாகக் காணலாம்.
இதே போல தூதுவளை, ஓமவல்லி, வெற்றிலை முதலிய இலைகளையும் தோசை மாவில் கலந்து தோசையாக ஒவ்வொரு நாளும் கொடுத்து வர குழந்தைகள் சளியின்றி மிக ஆரோக்கியமாக வளர்ந்து வருவார்கள்.
எனது இப்பதிவைப் படித்ததற்கு மிக்க நன்றி!
நாளை வேறு குறிப்புகளுடன் சந்திக்கிறேன்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இது தெரிந்தால், உங்கள் கூந்தலை இனி இழக்க மாட்டீர்கள் !!