இது தெரிந்தால், உங்கள் கூந்தலை இனி இழக்க மாட்டீர்கள் !!
இந்த வலைப் பதிவில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு தேவையான பல அரிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளனன. தொடர்ந்து இப்பதிவுகளைப் படித்துப் பயனுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முடி உதிர்வைத் தடுத்து உங்கள் இளவயது கூந்தலை திரும்பப் பெற குறிப்புகள்:
தற்போது முடி உதிர்தல், இள வயது சொட்டை என்பன சமூக வியாதிகளாகி விட்டன. ஷாம்பு உபயோகப் படுத்தி நீங்கள் இப்போது வேகமாக வெளியே கிளம்பலாம். ஆனால் ஷாம்பு உங்கள் தலை மயிர்க்கால்களை உறுதி இழக்கச் செய்கிறது. இதை 1-2 வருடங்கள் ஷாம்பு மட்டும் பயன் படுத்தியவர்கள் தங்கள் முடி உதிர்தல், rough ஹேர் கொண்டு உணரலாம்.பெண்கள் மற்றும் ஆடவர் என அனைவரும் தங்களது மெல்லிய கனமில்லாத கூந்தல் பற்றிய கவலையில் உள்ளனர். பலரிடம் தம் தோற்றம் பற்றிய தன்நம்பிக்கைக் குறைபாடு (low self esteem) உள்ளது.
ஏன் இந்த நிலைமை ?
1998 களில் நமது கடைகளில் விற்கத் தொடங்கிய ஒரு முக்கியமான பொருள் "ஷாம்பு ". வகை வகையான ஷாம்புகள் உங்கள் வீட்டுத் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தப்பட்டன. அவை பல்வேறு விதமான நறுமணத்துடன் நம் மனங் கவர்ந்தன. தற்போது ஷாம்பு உபயோகப் படுத்தாத ஒரு குழந்தை கூட நம்மிடையே ஆச்சர்யமாகப் பார்க்கப்படும். அந்த அளவிற்கு ஷாம்பு என்பது மிகச் சிறந்த ஹேர் கிளென்சர் என நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் ஷாம்பு பயன்படுத்தி நாம் நமது டெலிகேட் ஆன சேலைகள் முதலிய துணிகளை அலசி, பயன் பெறலாம். அத்துணிகளை விட டெலிகேட் ஆனது நமது மண்டை ஓட்டின் தோல். அதற்க்கு கண்டிப்பாக ஷாம்பு போன்ற கெமிக்கல்கள் கேடு விளைவிக்கும். இக்கருத்தினை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
என்ன செய்யலாம்?
கடந்த 4 வருடங்களாக நான் ஷாம்பு பயன் படுத்தவில்லை. வெட்டிய முடி என் சிறு வயதில் எவ்வளவு நீளம் இருந்ததோ அவ்வளவு நீளம் வளர்ந்தது. அடர்த்தியும் கூடிக் கொண்டே இருக்கிறது.
இது என் அனுபவச்சான்று. உங்களுக்கு சீகைக்காயை வாங்கி அரைத்து தலையில் அரை மணி நேரம் ஊற வைத்து அலசி, தலை குளிக்க நேரம் இல்லையெனில், கீழ் வரும் இருவகை எளிய குளியல் முறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்தெடுங்கள். நிச்சயமாக உங்கள் தோற்றம் மேம்படும்.
1 வெந்தயம்
வெந்தயத்தை தேவையான அளவு எடுத்து, தலை குளிக்கும் முதல் நாள் இரவு நீரில் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலை ஊறிய வெந்தயத்தை mixy யில் இட்டு அரைத்து (நன்றாக ஜெல்லி பதம் வரும் வரை நீர் விட்டு அரைக்கவும்), தலை வேர்க்கால்களில் படுமாறு தேய்க்கவும். தலையில் அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைகளைக் கவனிக்கலாம். பின்பு தலை அலசிக் குளிக்கவும். சைனஸ்/ migrane தொல்லை உள்ளவர்களும் இம்முறையைபப் பின்பற்றலாம். அவர்கள் இளஞ்சூடான நீரில் தலை அலசலாம். வாரம் இருமுறை இதைப் பின்பற்றி ஒரு மாதப் பொழுதில் இழந்த கூந்தலை மினுமினுப்புடன் திரும்பப் பெறலாம்.
2.செம்பருத்தி
செம்பருத்தி இலைகள், பூ என அனைத்தையும் mixy யில் இட்டு மைய்ய அரைக்கவும். அதை தலையில் 10 நிமிடம் வெறிக்கால்களில் நன்கு படுமாறு தேய்த்து மசாஜ் செய்யவும். பின்பு கூந்தலை நன்றாக அலசுங்கள். வாரம் இருமுறை இவ்வகையில் உங்கள் தலை முடி சிறிது சிறிதாக ஷாம்பூவினால் அடைந்த கேடுகளில் இருந்து மேம்படும்.
ஷாம்பு பயன்படுத்துவதை அறவே தவிருங்கள். எத்தனை ஆண்டு காலம் நீங்கள் ஷாம்பு பயன் படுத்தினீர்களோ, அதில் பாதி கால அளவு ஷாம்பூவை தொடாமல் இருந்தால் கண்டிப்பாக உங்கள் இளவயது கூந்தல் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.
இக்குறிப்புகள் தங்களுக்குப் பயனுள்ளவையாக இருந்திருக்கும் என நம்புகிறேன். இது போல் பல தகவல்களை இவ்வலைப் பதிவில் தொடர்ந்து படித்து வாருங்கள்.
நன்றி !
கருத்துகள்
கருத்துரையிடுக